இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினாறாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன.  வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர். அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

படம்
துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர். அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார் இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை அடையா

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

படம்
டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் கருத்து தெரிவித்த டிஐஜி ரூபாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி  தனது புகார் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, 2வது முறையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  இந்தநிலையில் சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா மீ

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

படம்
காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது. தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Kec

கூடா நட்பு

கூடா நட்பு “கெட்ட நடத்தை உடையவனும்  கபடப் பார்வை கொண்டவனும் நேர்மையற்றவனுமாகிய ஒருவனைத் தனது நண்பனாக்கிக் கொள்பவன் விரைவில் பாழடைந்து போவான்.” – சாணக்கியர் He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined. -Chanakya

டார்ஜிலிங்கில் போலீஸ் நிலையம் முற்றுகை : மீண்டும் போராட்டம்

டார்ஜிலிங்கில் போலீஸ் நிலையம் முற்றுகை : மீண்டும் போராட்டம் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தொண்டர் டாசி பூதியா (வயது 28) என்பவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.  ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சோனாடா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மே

ஜி-20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல்

ஜி-20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல் ஜெர்மனியின் G20 உச்சிமாநாடு நடக்கவிருக்கும் ஹம்பர்க் நகரில் ஆர்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதல்களில் எழுபத்தாறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆர்பாட்டக்காரர்களில் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மோதல்கள் 12,000 ஆர்பாட்டக்காரர்கள் கலந்து கொண்ட ” நரகத்திற்கு வரவேற்பு”  என்ற அணிவகுப்பினை  பொலிஸார் தடுத்தபோது  தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், காலநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் பற்றி இம்மாநாட்டில் விவாதிப்பர். கற்கள், தீப்பந்தங்கள் மற்றும் பாட்டில்கள் ஆகியவற்றை வீசி எறிந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் மிளகு ஸ்ப்ரேயை பாய்ச்சினர். இப்போராட்ட அமைப்பாளர்கள் முதலில் மோதல்கள் நடந்த இடத்தில் அணிவகுப்பை இரத்து செய்தனர். ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களிலேயே இருந்தனர். இதன்பின்னர்  நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ? ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக  காட்ட்ப்பட்டுள்ளது.  மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது. எது உண்மை ? ஆஸ்திரேலியாவின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் புஷ்வுட் பெரியிலிருந்து, EBC-46 என்ற ஒரு ரசாயனத்தை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த ரசாயனத்தை  நேரடியான ஊசி மூலம் எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பரிசோதித்த போது, அவற்றின்  புற்றுநோய் கட்டிகளை இந்த ரசாயனத்டினால் அழிக்கும்  திறனைப் பற்றிய முதல் படியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். தற்போது விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இந்த ரசாயனத்தை குறித்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வ

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார். டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.

கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும் : ஸ்டாலின்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும் : ஸ்டாலின் கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும்; ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு ப

இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

படம்
இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது. மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபர

உ.பி.-யில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி இடமாற்றம்

உ.பி.-யில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி இடமாற்றம் உத்தரபிரதேசத்தில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் சாயானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த, ஸ்ரேஷ்டா தாகூர், புலந்ஷாஹர் பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். ஆவணங்களின்றி வாகனம் இயக்கியதாக எழுந்த புகாரில், பாஜக தொண்டர் ஒருவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து, பெண் காவல் அதிகாரியை முற்றுகையிட்ட பாஜகவினர் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், மேலிட உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 234 அதிகாரிகளின் பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தாக்கூர் கூறுகையில், “என்னுடைய இடமாற்றம் வழக்கமானது அல்லது அரசியல் என்று எதுவும

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர். நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து சிறப்பு உரையாற்றினார்.