இடுகைகள்

ஆகஸ்ட், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

படம்
இயேசுவின் திருமுழுக்கு இந்த அத்தியாயத்தில் இயேசுவின் திருமுழுக்கு பற்றி விவிலியத்தில் காணப்படும் விவரங்களை பாப்பரசர் பெனடிக்ட் XVI அலசி ஆராய்கின்றார். இயேசுவின் திருமுழுக்கினை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், இதற்கும் இறைமக்களின் திருமுழுக்கிற்கும் என்ன தொடர்பு என்பதையும் விளக்குகிறார். காலகட்டமும் காலத்தவர்களும் இயேசுவின் திருமுழுக்கு பற்றி மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் எழுதப்பட்டுள்ளது. லூக்கா இந்நிகழ்வு வரலாற்றில் எப்பொழுது நடந்தது என நாம் எளிதாக அநுமானிக்கும்வண்ணம் கால ஆதாரங்களையும் காட்டுகின்றார். லூக்கா 3:1-2 சொல்வதாவது : திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். ஆகவே இயேசுவின் திருமுழ

நாசரேத்தூர் இயேசு - பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 1

பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் எழுதிய " நாசரேத்தூர் இயேசு " என்ற புத்தகத்தை சமீபத்திலே வாசித்தேன். ஒருவிதமான விசுவாசத்தைப் பற்றிய தளர்ச்சியிலும், சுய முரண்பாட்டிலும் குழப்பத்திலும் சிக்கித்தவிக்கும் கத்தோலிக்க மனங்களுக்கு இப்புத்தகம் அருமருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. விவிலிய வசனங்களுக்கு நாத்திகப் பாணியில் விளக்கம் கொடுத்து ஊரை எமாற்றும் சில இறையியல் வல்லுனர்களை அடையாளம் காணவும் இப்புத்தகம் நிச்சயமாக உதவும் . இனி, இந்த புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் பாப்பரசர் என்ன சொல்கிறார் என பார்ப்போம். பழைய ஏற்பாட்டின் இணைச் சட்ட ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் உறுதிமொழிக்கும் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இணைச் சட்டம் 18:15 வசனத்தில் சொல்லப்பத்திருப்பது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஒரு இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஆகவே வாக்களிக்கப்பட்டவர் ஒரு புதிய தாவீது (இஸ்ரயேலின் அரசர்) அல்லர்; மாறாக அவர் ஒரு புதிய மோசே (இறைவாக்கினர்). இறைவாக்கினர் என்பவர் யார் ? வர