இடுகைகள்

செப்டம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் YHWH எனக் குறிக்கப்படுகிறது. யூத வழக்கப்படி இறைவனின் நாமம் உச்சரிக்கப்படலாகாது. நம்மூரில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக பெயரைச் சொல்லாமல் உறவுமுறையைச் சொல்லி அழைக்கும் வழக்கம் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்ற இடத்தை முன்பு ஆண்டுவந்த எட்டப்ப மகாராஜாவுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக, அவ்வூரில் எண்களின் பெயரையே மாற்றினர் என்பர். 'ஏழு' (7) - க்குப் பிறகு 'எட்டு' (8) என்று சொல்லாமல் 'மகாராஜா' என்று சொல்லி பின்னர் 'ஒன்பது' எண்ணப்பட்டது. இதுபோலவே, அகில பரமண்டலங்களையும் உருவாக்கி ஆண்டுவரும் இறைவனை மதிப்பின் காரணமாக நேரடியாகப் பெயரிட்டு அழைக்காமல் " அடோனை " (பிரபு, ஆண்டவர் அல்லது கர்த்தர்) என்று அழைத்தனர். இதனால்தான் தமிழ் விவிலியங்களில் இறைவனை ஆண்டவர் அல்லது க

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3

(பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம் ) மெசியா அல்லது கிறிஸ்து என்பதன் பொருள் மெசியா அல்லது கிறிஸ்து என்றால் அபிஷேகம் (திருப்பொழிவு) செய்யப்பட்டவர் என்று பொருள். ஏசாயா 11:1,2 சொல்வதாவது:- ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும் . ஆகவே, திருப்பொழிவு என்றால் ஆண்டவரின் ஆவி ஒருவர் மேல் இறங்கித் தங்குதல் என்று பொருள். இயேசு செபக்கூடத்தில் இதனையே இவ்வாறு குறிப்பிடுகிறார் :- லூக்கா 4:18 18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்' . இய