இடுகைகள்

அக்டோபர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாசரேத்தூர் இயேசு - 5

இயேசுவின் மூன்றாவது சோதனை மத்தேயு 4:8-11 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். சாத்தான் ஆண்டவரை மலையுச்சிக்குக் கொண்டு சென்று, தன்னை வணங்கினால் உலகின் அரசாட்சியை அவருக்குக் கொடுப்பதாகச் சொன்னான். "மெசியா எனப்படுபவர் உலகம் முழுவதையும் இணைக்கும் ஓர் அரசை உருவாக்கி, சமாதானத்தையும் நல்லாட்சியையும் கொடுப்பவர்தானே? ஆகவே, சாத்தான் வழங்குவதாகச் சொன்ன அரசாட்சியை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாமே?" எனும் கேள்வி நம் மனத்தில் எழலாம். இதற்கான விடையை இரண்டு இடங்களில் காணமுடியும். முதலாவது : உயிர்த்த ஆண்டவர் சீடர்களை கலிலேயாவிலுள்ள ஒரு மல

நாசரேத்தூர் இயேசு - 4

படம்
(பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம்) இறைவனைக் குறித்து சிலர் கேட்கலாம் - "ஏன் இறைவன் தான் இரு்ப்பது எல்லோருக்கும் தெரியும்படியாக செய்யவில்லை ? இயேசுக் கிறிஸ்து தான் இருப்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளுமாறு அறிகுறி ஒன்றை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே ?". இது இறைவனையும் மனிதனையும் பற்றிய புரிந்துகொள்ளக் கடினமான ரகசியம். உலகில் இறைவன் நேரடியாக காணமுடியாதவராக இருந்தாலும், மனிதரின் மனம் தேடும்போது கண்டுபிடிக்கத் தக்கவராக இருக்கிறார். இத்தகைய உலகில்தான், போலித் தத்துவங்களால் உருவாகும் மாயையை எதிர்க்கவும், மனிதன் உணவினால் மட்டுமில்லாமல் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிவதாலும் உயிர்வாழ்கிறான் என்பதை உணரவும் நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். இரண்டாவது சோதனை மத்தேயு 4:5-7 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளி