ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்



பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி
கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத்
தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத்
தாக்கிக் கொன்றுள்ளனர்.



ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில்  42 வயது ஆன அலிமுத்தீன் இல்யாஸ்
அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.



இதுபோன்ற சம்பவங்களில், பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு
கொலை செய்பவர்கள், வேறு காரணங்களுக்காக கூலிக்குக் கொலை செய்பவர்களாகவும்
இருக்கக் கூடும். ஆனால், பசு பக்தர்கள் என்று ஒரு கூட்டம் வன்முறையை
நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் வரை, அதனை சமூக விரோதிகள் தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3