பழக்கத்தை மாற்றுவோம் - இதயத்தைக் காப்பாற்றுவோம்

பொதுவாக சிகரெட் பிடிப்பது, உடல் பருமனாயிருப்பது போன்றவை

இதயத்தின் நலனுக்கு நல்லதில்லை என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இவை தவிர இன்னும் சில பழக்கங்கள் இதயத்தை அதிகமாக பாதிக்கலாம் என்பது தெரியுமா ? அவை பற்றி இங்கு பார்ப்போம்.





ஒழுங்கான தூக்கமில்லையா ? 
தொடர்ந்து தூக்கமில்லாமல் இருப்பதால் உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இதயத்தைச் சேதப்படுத்தும் ஹார்மோன்கள் உற்பத்தியாகி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. 2011-ல் பிரிட்டனில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி தினமும் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 6-லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குபவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என அறியப்பட்டது. ஒரு இரவில் 7 மணிநேரம் தூங்குவது மிகவும் ஏற்றதாகும். நாம் பல மணிநேரம் படுக்கையில் தூங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் குறட்டை மற்றும் உறக்க மூச்சிடைநிற்பு (sleep apnea) போன்றவற்றால் தேவையான அளவுக்கு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்த நாள் காலையில் மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் உணர்வதாக இருந்தால் மருத்துவரிடம் சொல்லி சிகிச்சை பெறுவது நல்லது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3