புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்



ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும்
பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற
சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர்.





நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு
விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான
சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி,
ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது.








பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம்
இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய
மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து 
பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து
உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து
சிறப்பு உரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3